Afleveringen

  • நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் கடும் எதிர்ப்புகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று கூறுகிறார். பொதுவாக இது விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்கு சாதகமானது, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப்பாதுகாப்பை அழிப்பது என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    இந்த 3 சட்டங்கள் எதை நோக்கியது?

    இதனை ஒரு எளிய மற்றும் பக்கச்சார்பற்ற கலந்துரையாடலாக நடத்த விழைகிறது வாசகர் வட்டம். அனைவரும் மூன்று மசோதாக்களையும் ஓரளவிற்கு படித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இந்த மசோதாக்களை ஆராய்வதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். அனைவரும் கலந்துகொண்டு கலந்துரையாடலை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் !

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர்: சரவணக்குமார்

    டிரெயில்ப்ளேசிங் மென்பொருள் நிறுவனமான 37 சிக்னல்களின் நிறுவனர்களிடமிருந்து, ஒரு வித்தியாசமான வணிக புத்தகம் - இது ஒரு புதிய யதார்த்தத்தை ஆராய்கிறது. இன்று, யார் வேண்டுமானாலும் வியாபாரத்தில் இருக்க முடியும். அணுக முடியாத கருவிகளை இப்போது எளிதாக அணுகமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமில்லாத விஷயங்கள், இப்போது எளிமையாக்கப் பட்டுருக்கிறது.

    அதாவது யார் வேண்டுமானாலும் ஒரு தொழிலைத் தொடங்கலாம். பரிதாபகரமான 80 மணி நேர வாரங்கள் வேலை செய்யாமலும் அல்லது உங்கள் வாழ்க்கைச் சேமிப்பைக் குறைக்காமலும் நீங்கள் அதைச் செய்யலாம். உங்கள் நாள் வேலை உங்களுக்கு தேவையான அனைத்து பணப்புழக்கத்தையும் வழங்கும் போது நீங்கள் அதை பக்கத்தில் தொடங்கலாம். வணிகத் திட்டங்கள், கூட்டங்கள், அலுவலக இடம் ஆகியவற்றை மறந்து விடுங்கள் - உங்களுக்கு அவை தேவையில்லை.

    அதன் நேரடியான மொழி மற்றும் எளிதான சிறந்த அணுகுமுறையுடன், மறுவேலை என்பது சொந்தமாகச் செய்ய வேண்டும் என்று கனவு கண்ட எவருக்கும் இது ஒரு சரியான விளையாட்டு புத்தகம். ஹார்ட்கோர் (Hardcore) தொழில்முனைவோர், சிறு வணிக உரிமையாளர்கள், வெளியேற விரும்பும் நாள் வேலைகளில் சிக்கித் தவிக்கும் நபர்கள், இனி பட்டினி போட விரும்பாத கலைஞர்கள் அனைவரும் இந்த பக்கங்களில் மதிப்புமிக்க உத்வேகத்தையும் வழிகாட்டலையும் காண்பார்கள்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • Zijn er afleveringen die ontbreken?

    Klik hier om de feed te vernieuwen.

  • பொன். சின்னத்தம்பி முருகேசன் (தமிழில்)

    வாசிப்பவர்: புனிதரூபன்

    இயற்பியலின் தாவோ” நவீன இயற்பியலுக்கும் கிழக்கத்திய இறைஞானத்திற்கும் இடையிலான ஒப்புமைகள் பற்றிய நூல். இது கண்ணுக்குப் புலப்படாத அணுவியல், நுண்ணணுவியல் உலகினையும், மீப்பெரும் அளவிலான பேரியக்க மண்டலத்தையும் சார்பியல், குவாண்டம் கொள்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும்போது உணர்ந்து அறியக்கூடிய உண்மைகள் தொன்மை வாய்ந்த கிழக்கத்திய தத்துவார்த்த மரபுகளோடு ஆழமான ஒப்புமை கொள்கின்றன என்பதை நிலைநிறுத்துகிற ஆய்வு ஆவணம்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர்: ஹேமபிரபா

    எழுத்தாளர் மற்றும் கவிஞரான நரன், பிறந்தது விருதுநகரில். பள்ளிக்காலங்களில் கிறித்துவ ஈடுபாடு தீவிரமாய் இருந்திருக்கிறது. தேவாலய நாடகங்கள் போடுவதும், அதில் நடிப்பதும் இவருக்குப் பிடித்திருந்தது. நாடகங்களை இவரே எழுதத் தொடங்கும்போது விவிலியம் சார்ந்து அதிகம் வாசித்திருக்கிறார். இவரின் இன்றைய எழுத்துக்களிலும் இதன் தாக்கம் இருக்கிறது. தேவதச்சனின் கவிதைகளும் அவருடன் ஏற்பட்ட உரையாடலும், இவரின் கவிதைகளை இன்று வரை வழி நடத்துவதாக நினைக்கிறார். ‘சரீரம்’, ‘கேசம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், ‘மிளகு, பருத்தி மற்றும் யானைகள்’, ‘லாகிரி’, ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’,  ‘உப்புநீர் முதலை’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர் : ராஜா செல்வம்

    'ஏன் வாழவேண்டும் என்பதற்கு ஒரு காரணத்தைக் கொண்டிருக்கும் மனிதன், எப்படியாவது எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வான்’.

    உலகின் 24க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. ஆசிரியர் வதைமுகாம்களில் நிலவும் நெருக்கடி மற்றும் துன்புறுத்தலுக்கு நடுவே உயிர் வாழ்வதற்கும், எஞ்சியிருப்பதற்கும் ஆதாரமாக அவருக்கு அமைந்த நம்பிக்கையின் நீட்சியே இந்நூல். மனித விடுதலை, தன் மதிப்பு, வாழ்வின் அர்த்தம் குறித்த மெய்யான தேடல் பற்றிய ஆழ்ந்த பார்வையோடும் மனித மேன்மை குறித்த நோக்கோடும் உருப்பெற்றிருக்கும் புத்தகம் இது. இது ஒரு வரலாற்று ஆவணம். ஓர் இறுதி எச்சரிக்கை. பெறுமதியான சிந்தனையும் நம்பிக்கையும் நோக்கமும் இழைந்தோடும் புத்தகம்.

    புத்தகத்தின் மையக்கருத்து: மனிதன் தனது மனத் துணிவால் புறச்சூழல்களை எதிர்த்து நிற்க முடியும். அதனால்தான் ஹிட்லரின் சித்ரவதைக் கூடங்களில் சிக்கி சின்னாபின்னமாகி உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட லட்சக்கணக்கானோர்களைப் பற்றி யோசிக்காமல் அதிலும்  சிலர் மட்டும் எப்படி உயிருடன் இருந்தார்கள் என்பதைக் கண்டறிவதிலேயே அக்கறை கொண்டிருந்தார் ஆசிரியர். அதன் வெளிப்பாடே இந்நூல்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர்: சு.க.பரிதி

    காலம் தாழ்த்துவதை விட்டொழித்து, குறைவான நேரத்தில் அதிகமான விஷயங்களைச் சாதிப்பதற்கான 21 வழிகள் பற்றி ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.

    நாம் செய்ய நினைக்கும் அனைத்தையும் செய்து முடிக்க அதிக நேரம் பிடிக்கலாம், சில நேரங்களில் அவற்றை செய்ய இயலாமலும் போகலாம். சாதனையாளர்கள் எல்லா செயல்களையும் செய்ய முற்படுவதில்லை, மிக முக்கியமான செயல்களில் மட்டுமே அவர்களின் சிந்தனை ஓட்டம் செலவிடப்படுகிறது. அதாவது, அவர்கள் தவளைகளை உட்கொள்கிறார்கள். 😊

    ஒரு பழமொழி உண்டு, காலை எழுந்தவுடன் முதலில் தவளை உட்கொள்பவருக்கு ஒரு மன நிறைவு இருக்குமாம், அந்த நாளின் மிக மோசமான பகுதி கடந்து விட்டது என்று. அதைப் போலவே இப்புத்தகத்தின் ஆசிரியர், தவளை உட்கொள்வதை, ஒரு நாளின் சவாலான செயலுக்கு தொடர்பு படுத்துகிறார்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர்: சரவணக்குமார்

    உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்க்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் வழங்குகிறார். கீழ்கண்டவற்றை உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:

    >  உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி ?

    >  மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி ?

    >  பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி ?

    > உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி ?

    > அதிகத் திறந்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி ?

    கூட்டத்தில் புத்தகத்தின் முக்கியமான மற்றும் அதிக பயன் தரக்கூடிய தகவல் உள்ள பகுதிகள் வாசிக்கப்படும். புத்தக வாசிப்புக்கு அனைவரையும் வரவேற்கிறோம். வாசிப்பின் முடிவில் கலந்துரையாடலும் நடைபெறும்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர்: ராஜா செல்வம் 

    அடித்துப்பிடிக்கும் கூட்டம், அழுகிற குழந்தைகள், மூக்கைத்துளைக்கும் கிருமி நாசினியின் வாசனை - கதைகள் தொடங்குவதற்கு ஏற்ற இடம் அல்ல. ஆனால் நிஜ வாழ்க்கையில், பெரும்பாலான கதைகள் இங்கே தொடங்குகின்றன/ முடிவடைகின்றன.

    ‘குழப்பமான மற்றும் கூட்டமான இந்திய மருத்துவமனை’

    “நோய்வாய்ப்பட்ட நோயாளி, கோபமடைந்த உறவினர்கள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் பிடிபட்ட இந்திய மருத்துவர் மாயாஜால சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற வேண்டும். அவரது தோளில் கனமான உணர்ச்சிகரமான மணல் மூட்டை அழுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் அவர் தனது வெள்ளை கோட் பாக்கெட்டிலிருந்து மந்திரம் போல ஒரு முயல் அல்லது இரண்டை இழுத்து நோயாளிகளை குணப்படுத்த முயற்சிக்கிறார்.”

    இந்தியாவில் மருத்துவம், மருத்துவமனை, நோயாளிகள், நோயாளியின் உறவினர்கள், அவர்களின் மனநிலை, மருத்துவர், அவரின் சூழ்நிலை பற்றி நிறைய படித்திருப்போம். ஆனால் இவை அனைத்தையும் ஒரு மருத்துவரின் பார்வையில், அவர் சந்தித்த பல வித மனிதர்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆசிரியர் பிரபலமான இதய நோய் நிபுணரான டினி நாயர்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர் : சரவணக்குமார்

    இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆஸ்டின் க்ளென் ஒரு சித்திர படைப்பாளி , பிளாக்கர் (austinkelon.com). இணையத்தால் பல செயலிகளில் அடிமையாகி கொண்டிருக்கும் 

    நாம் எப்படி அதே இணையத்தை பயன்படுத்தி எப்படி  நம்மை மேம்படுத்தி கொள்வது?  இணையத்தில் நமக்கென தனி அடையாளம் பதிப்பது எவ்வாறு ?  அதில் இருந்து எவ்வாறு பணம் பண்ணுவது?  எதிர் கருத்துக்களை கையாள்வது எப்படி ?  மற்றவர் படைப்புக்களை நேர்மையாக திருடுவது எப்படி?  சொந்த படைப்புகள் இல்லாமல், திருட்டு படைப்புக்களை வைத்தே இணையத்தில் வளருவது எப்படி? 

    இவ்வாறான பல கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த இக்காலத்து புத்தகம். சுய கண்டுபிடிப்பிக்கான எளிதான வழி இந்த இணையம், அதற்கு நாம் தினமும் சிறு படைப்புகள் , கருத்துக்கள் அல்லது தரவுகளை இணைய வெளியில் பகிர வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர் : ராஜா செல்வம் | வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
    இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.
    கூட்டத்தில் வண்ணதாசன் அவர்களின் (தமிழில் வெளியான 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக பலராலும் கருதப்படும்) தனுமை சிறுகதை வாசிக்கப்படும்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message

  • வாசிப்பவர்: சு.க.பரிதி

    வடிவமைப்பு என்றால் என்ன? 

    மோசமான வடிவமைப்பு என்றால் என்ன? 

    ஒரு கதவிடம் சென்று தள்ளுவதா ? இழுப்பதா ? என்று சிந்தித்தது உண்டா. இத்தககைய சந்தேகத்திற்குரிய கதவுகள் “நார்மன் கதவுகள்” என்று இப்புத்தகத்தின் ஆசிரியர் பெயரிலேயே வெகுவாக அழைக்கப்படுகின்றன. இந்த புத்தகத்தின் ஆசிரியர் நார்மன், ஒரு அமெரிக்க ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர். பயனர் மைய வடிவமைப்பு [User Centric Design] என்ற துறையை இவர் பிரபலப்படுத்தினார். அன்றாட பயன்படுத்தும் பொருட்கள், அழகாக இருந்து மட்டும் பயனில்லை, மனிதர்களால் எளிதில் பயன்படுத்த ஏகுவாக இருக்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகும். அவ்வாறாக பயனர் பயன்பாடு தெளிவில்லாத பொருட்களின் ஆய்வு தொகுப்பே இப்புத்தகம்.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message
  • வாசிப்பவர் : ராஜா செல்வம் | “உன் நண்பனுக்கு உதவ முடிவு செய்தால் அவன் சுமை உன் தலையில் விழாத வகையில் உதவி செய்”  இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் நிதி சார்ந்த கொள்கைகள் அனைத்தும் பாபிலோனில்தான் பிறந்து வளர்ந்தது. ஏனெனில் அங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் பணத்தின் மதிப்பை போற்றினார்கள். பணத்தை சேமிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள்.  அவர்களைப்போல் பொருளாதார வெற்றியை விரும்பும் அனைவருக்கும் எவ்வாறு பணம் சம்பாதிப்பது, சாம்பாதித்ததை எப்படி சேமிப்பது, சேமித்ததை முதலீடு செய்து, மேலும் எவ்வாறு சம்பாதிப்பது என்பதைக் கற்றுத் தருவதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/iiscperavai/message