Afleveringen
-
தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு
-
சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.
-
Zijn er afleveringen die ontbreken?
-
பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட வாஸந்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
-
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி எனும் சிறுகதையை கண்மணி ராஜா எழுதியுள்ளார். இவரின் இந்தக் கதை தமிழ் சிறுகதை உலகில் மிகவும் பேசப்பட்ட ஒரு கதையாகும்.
-
குழப்பத்தின் சுற்றுப்பாதையில், ஒரு பெண் தன் கல்வியறிவற்ற தாய்க்கு அவள் எழுப்பும் காதல், வெறுப்பு மற்றும் கோபம் போன்ற முரண்பட்ட உணர்ச்சிகளை சமாளிக்க கடிதம் எழுதுகிறாள். தாய், தன் கணவனுக்கு அடிமையாகி, தன் குழந்தைகளின் மீது பற்று கொண்டு, மருமகளை வீட்டை விட்டு விரட்டும் அளவுக்குத் துன்புறுத்தினாள். கடிதத்தில், அவள் இந்த தேவையற்ற விரோதத்தை உணர முயற்சிக்கிறாள், ஆனால் அவளுடைய செயல்களை அரிதாகவே புரிந்து கொள்ள முடியவில்லை.
சல்மா கவிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டிதுவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார். தி.மு.க.வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
-
அய்க்கண் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். தமிழக அரசு பதினாறு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவர் எழுதிய நாடகம் முதல் பரிசு பெற்றது. இந்நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவர் எழுதிய, மண் எனும் சிறுகதை தற்போது 12 ஆம் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் எழுத்தாளா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்தவர். தமிழக அரசின் அண்ணா விருது பெற்றவர்.
-
எம். எஸ். அப்துல் காதர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் கழனியூரன் என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான கி. இராசநாராயணனின் தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலி மாவட்ட நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளைத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை தமிழிலக்கிய உலகம் இவரை செவக்காட்டு கதைசொல்லி என்கிறது.
-
இவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 51 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை.
-
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார். சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.
-
எஸ். எம். இரவிச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.
-
சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் பணியாற்றினார். இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன இவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஒரு சோஷியலிசவாதி. இவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் இவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் இவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் இவர் ஒரு விபத்தில் காலமானார்
-
அ. வெண்ணிலா தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
-
ராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத்
-
ஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத்
-
புலி நகம் மிக முக்கியமான சிறுகதை. மைதிலி சம்பத் தமிழின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்.
-
கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.
-
சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள். சந்திராவின் முதல் சிறுகதை புளியம்பூ 2000-ல் எழுதப்பட்டது. 2006-ல் காலச்சுவடு பெண் எழுத்தாளர்களுக்கான புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய புளியம்பூ மற்றும் கிழவிநாச்சி சிறுகதைகள் முறையே இரண்டாம், மூன்றாம் பரிசைப் பெற்றன. வாய்மொழிக்கதைகள் சொல்லும் கதைசொல்லியின் சாயலில் அவரது தொடக்ககாலக் கதைகள் இருந்தன. முதல் சிறுகதைத் தொகுப்பு பூனைகள் இல்லாத வீடு உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக 2007-ல் வெளிவந்தது. (https://tamil.wiki/wiki/சந்திரா_தங்கராஜ்)
-
உமா மகேஸ்வரி எனும் மஹி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். உமா மகேஸ்ரி தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர் . தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார். இவரின் இந்தக் கதை குழந்தைகளின் உலகினை நம் கண்முன்னர் காட்டிச் செல்கிறார்.
-
செழியன் (Chezhiyan) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளராக உள்ளார். இவர் கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தபின் பி. சி. சிறீராமிடம் ஒளிப்பதிவாளராக தன் பணியைத் தொடங்கினார். செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர். கல்லூரி என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி, இயக்குநர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகி, அப்படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013 ல் இலண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார். இவரது இந்தக் கதை தமிழ் சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதையாகப் பார்க்கப்படுகிறது.
-
அழகர்சாமியின் குதிரை எழுதிய பாஸ்கர் சக்தி ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட. இவரது கதைகள் மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறுபவையாக உள்ளது.
- Laat meer zien